Advertisement

Main Ad

ஆசிய கிரிக்கெட் - 20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணி இன்று அறிவிப்பு



ஆசிய கிரிக்கெட் - 20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணி இன்று அறிவிப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் (பிப்.25-மார்ச்.8) மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி (மார்ச்.16-ஏப்.6) வங்காளதேசத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி பெங்களூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்வு செய்யப்படுகிறது. ஆசிய கோப்பைக்கான ஒரு நாள் போட்டி அணியில் சுரேஷ் ரெய்னா நீக்கப்பட வாய்ப்புள்ளது.

கடந்த 24 ஒரு நாள் போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் (அதுவும் ஜிம்பாப்வேக்கு எதிராக) மட்டுமே அடித்துள்ள அவரது இடத்திற்கு புஜாராவை கொண்டு வருவது குறித்து தேர்வு குழு பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து தொடரில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே களம் இறங்கிய ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவர், இரானி கோப்பை கிரிக்கெட்டில் நேற்று 82 பந்துகளில் செஞ்சுரி அடித்ததை, தேர்வாளர்களும் நேரில் கண்டு களித்தனர். இதனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம். உள்ளூர் போட்டிகளில் ஜொலித்து வரும் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் வினய்குமாரும் மீண்டும் அழைக்கப்படலாம்.

இரானி கோப்பை போட்டியில் சோபிக்க தவறிய கவுதம் கம்பீர், ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். 20 ஓவர் போட்டி அணியில் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா தொடருவதில் பிரச்சினை இருக்காது. மொத்தத்தில் அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments