(க.கிஷாந்தன்)
சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் நாடளாவிய ரீதியில் 23.06.2017 அன்றும் அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 23.06.2017 அன்றும் வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்பட்டன.
அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர்.
வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.
எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடதக்கது.

0 Comments