Advertisement

Main Ad

கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து...

(க.கிஷாந்தன்)

இராவணாகொடையிலிந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி போக்குவரத்து சமிஞ்கை கம்பம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 23.06.2017 அன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23.06.2017 அன்று அதிகாலை இராவணாகொடையிலிருந்து பயணிகளை ஏற்றி புறப்பட்டு சென்ற குறித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு எற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
  
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments