(பிறவ்ஸ்)
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் உங்களது குடிநீர் விநியோகத்தில் ஏதாவது தடைகள் இருந்தால், அதுதொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்களை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்பட்டு குடிநீர் இணைப்புகளில் சீரற்ற காலநிலை காரணமாக ஏதாவது தடைகள் ஏற்பட்டால் கீழுள்ள அவசர தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறியத்தருமாறு அமைச்சு அறிவித்துள்ளது.
077 77 24 360 - பாலித வீரசிங்க (மேலதிக செயலாளர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு)
077 78 91 332 - எப்.எம். தேவராஜ் (உதவி பொது முகாமையாளர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு)
071 45 32 222 - பிரதீப் லக்ஷன் (சிரேஷ்ட உதவி செயலாளர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய இன்று வெள்ளிக்கிழமை (26) அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.
0 Comments