Advertisement

Main Ad

இன்று இலங்கையில் 15இற்கு மேற்பட்ட மாவட்டங்களில் டெங்கு நோய் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து வருகின்றது.


இன்று இலங்கையில் 15இற்கு மேற்பட்ட மாவட்டங்களில் டெங்கு நோய் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து வருகின்றது. ஆட்கொல்லி நோய் என்று அழைக்கப்படும் அளவிற்கு இன்று உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

டெங்கு மற்றும் இது போன்ற ஆட்கொல்லி வைரஸ் நோய்களுக்கு ஹோமியோபதி வைத்திய முறையின் மூலமாக வெற்றிகரமாக சிகிச்சை தரப்பட்டுள்ள போதிலும் பொதுவில் இந்த விடயம் மக்களைச் சென்றடையவில்லை.

டெங்கு நோய்க்கு ஹோமியோபதி வைத்தியமுறை சிறந்த தீர்வினைத் தருகின்றது என்ற தொணிப்பொருளில் கடந்த  25ம் திகதி பி.ப. 3:00 மணி தொடக்கம் 5:00 மணி வரை ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி வைத்தியர்கள் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினர்கள் சிவில் சமூக அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் மனித குல ஆரோக்கியவாழ்வு குறித்து அக்கறையுடன் தீவிரமாக செயற்படுகின்ற செயற்பாட்டாளர்கள் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் முஸ்லிம் எய்ட் அமைப்பின் பணிப்பாளர் அடங்கலாக அதன் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டெங்கு நோய்க்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்ட பல்வேறு அனுபங்கள் இங்கு  பரிமாறப்பட்டதுடன் பல்வேறு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்பட்டது. இங்கு பேசப்பட்ட விடயங்களையும் டெங்கு நோய்க்கு ஹோமியோபதி மருந்துவம் நிவாரணத்தை வழங்கின்றது என்ற செய்தியினையும் பரவலாக்க வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன் ஹோமியோபதி கவுன்சில் தனது செயற்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டெங்கு நோய்க்கு எவ்வாறு ஹோமியோதி மருந்தினை உடனடியாகக் கொண்டு செல்ல முடியும் என்ற ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன. இந்த கலந்துரையாடல் முஸ்லிம் எயிட் சிறி லங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படாது  

அஸீம் கிலாப்தீன் 

Post a Comment

0 Comments