முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
முஸ்லிம் காங்கிரசில் ஏற்பட்டிருந்த செயலாளர் பிரச்சினைக்கு தீர்வினை காணும் பொருட்டு கடந்த 14.12.2016 ஆம் திகதி இரவு தாருஸ்ஸலாமில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட கூட்டத்தில் தலைவரும் செயலாளரும் சந்தித்து ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்த தீர்மானத்திற்கு இணங்க, தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும், செயலாளர் ஹசனலி அவர்களும் தனிப்பட்ட ரீதியில் நேற்று இரவு ஒன்பதுமணிக்கு சந்தித்து செயலாளருக்குள்ள பிரச்சனைகளை மனம் விட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இப்பிரச்சினைக்கு தீர்வினை காணும் பொருட்டு தேர்தல்கள் ஆணையாளர் அவர்கள் தலைவரையும், செயலாளர்களையும் இன்று 16.12. 2௦16 ஆம் திகதி அழைத்திருந்தார். அந்த அழைப்பிற்கிணங்க தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் செயலாளர்களான ஹசனலி, மன்சூர் ஏ காதர் மற்றும் பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இன்று காலை பதினொரு மணியளவில் தேர்தல்கள் செயலகத்துக்கு சென்று தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்துள்ளார்கள்.
சுமூகமான முறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தான் தலைவருக்கும், கட்சியின் யாப்புக்கும் என்றென்றும் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், தனது முறைப்பாட்டினை விலக்கிக்கொள்கின்றேன் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் முன்பாக செயலாளர் ஹசனலி அவர்கள் வாக்குமூலம் வளங்கியதற்கு அமைய, மிக நீண்ட நாட்களாக இழுபரிப்பட்டுவந்த செயலாளர் பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
எனவே செயலாளர் ஹசனலி அவர்கள் தலைவருடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளதனால் அவருக்கு அதிகாரம் உள்ள செயலாளர் பதவி வழங்கப்படுவதாக இருந்தால் அது அடுத்து நடைபெற உள்ள பேராளர்கள் மாநாட்டின் மூலமாகவே அதிகாரம் வழங்க முடியும். அதுவரைக்கும் கட்சி யாப்பின் பிரகாரம் முடியாத விடயமாகும். ஒரு பேராளர் மாநாட்டின் தீர்மானமானது இன்னோறொரு பேராளர் மாநாடுவரைக்கும் செல்லுபடியாகும். இன்னுமொரு பேராளர் மாநாடு நடாத்துவதாக இருந்தால் அதற்கு பதினெட்டு மாதங்கள் பூர்த்தி அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments