Advertisement

Main Ad

சமூகத்தை தலைமைதாங்கி வழிநடாத்துகின்ற நிறுவனங்களாக பள்ளிவாயல்கள் மாற வேண்டும் ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்


எம்.ரீ. ஹைதர் அலி

சமூகத்தை தலைமைதாங்கி வழிநடாத்துகின்ற நிறுவனங்களாக பள்ளிவாயல்கள் மாற வேண்டும் ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (2016.12.15ஆந்திகதி - வியாழக்கிழமை) பள்ளிவாயலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கி வைத்ததோடு, பள்ளிவாயலின் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்..

எமது சமூகத்தை தலைமைதாங்கி வழிநடாத்துகின்ற நிறுவனங்களாக பள்ளிவாயல்கள் மாற வேண்டும். 1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் எமது ஊரில் இருந்த ஒற்றுமை தற்போது இல்லாமல் போயுள்ளது.

ஒவ்வொரு பள்ளிவாயல்களும் தொழுகை நடாத்தப்படுகின்ற இடமாக மாத்திரம் இல்லாமல் அப்பிரதேச மக்களின் சகல விடயங்களையும் தலைமைதாங்கி நடாத்துகின்ற ஒரு நிறுவனமாக மாறவேண்டும்.

எமது சமூகத்திற்கு மத்தியில் அத்தகைய சிறந்த தலைமைத்துவத்தினையும் நிலையான ஒற்றுமையினையும் கட்டியெழுப்புவதன் மூலமே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments