எம்.ரீ. ஹைதர் அலி
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொது கூட்டம் அன்மையில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் I.L. பதுர்தீன் தலைமையில் மீராவோடை அமீர்அலி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
தொடர்ச்சியாக செயலாளரினால் சென்ற வருடத்திற்கான பொதுச்சபைக் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதோடு, பொருளாளரினால் சென்ற வருடத்திற்கான கணக்கறிக்கையும் சமர்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபையோர் கருத்தும் இடம்பெற்று 2017ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது.
நிருவாக சபையின் விபரம்
01. தலைவர் : I.L.பதுருதீன்
02. செயலாளர் : M.I.M.சப்ரின்
03. பொருளாளர் : M.U. நஜீம் - ஆசிரியர்
04. உப தலைவர் : H.M.I. பஹாஸ்தீன் - ஆசிரியர்
05. உப செயலாளர் : S.M. நப்ராஸ்
நிர்வாக சபை உறுப்பினர்கள்
06. M. சாஜஹான்
07. M.M. பர்ஷான்
08. H.R.M. றிஸ்வி - ஆசிரியர்
09. M.A. பிர்னாஸ் - ஆசிரியர்
10. M. இஷ்ஷத்
11. M.C. நியாஸ்
12. A.L. சுபைர்
13. A.M. தௌபீக்
14. A.L.M. பாயிஸ்
15. A.M. அஸ்வர்
01. விளையாட்டு குழுத் தலைவர் : W. இம்தியாஸ்
02. கிரிக்கெட் தலைவர் : M.T.M. பைறூஸ்
03. கிரிக்கெட் உப தலைவர் : M. உமர் ஹசன்
ஆலோசகர்கள்
01. அல்ஹாஜ் அலியார் - முன்னாள் தலைவர் மீரா ஜும்ஆ பள்ளிவாசல்
02. அஷ்ஷெய்க். ஹாரூன் (ஸஹ்வி) - பணிப்பாளர் அல்-கிம்மா நிறுவனம்
03. மௌலவி முபாரக் - ஆசிரியர்
04. றிபான்
05. நிஜாம்
௭திர்வ௫கின்ற காலங்களில் ஒரு சிறப்பான விளையாட்டுக் கழகமாக கல்குடா பிரதேசத்தில் யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகம் திகல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்நிருவாகம் தெரிவு செய்யப்பட்டதோடு, சுமார் 5 வருட காலமாக தனது சிறப்பான தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய பதுர்தீன் இவ்வாண்டும் இக்கழகத்தின் தலைவராக சபையோரினால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் கழகத்தின் தலைவர் பதுர்தீன் கருத்து தெரிவிக்கையில் ஆலோசகர்களாக தெரிவுசெய்யப்ட்டுள்ளவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இக்கழகம் இனிவரும் காலங்களில் செயற்படும் என தெரிவித்தார். இறுதியாக இராப்போசனத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்
S.M. நப்ராஸ் - உப செயலாளர்
0 Comments