(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை மலையடிக்கிராமம் அர்-றவ்ளதில் குர்ஆனிய்யா கலாபீடத்தின் ஏற்பாட்டில் மீலாத்து நபி விழா சிறப்பு நிகழ்வு கலாபீட வளாகத்தில் இன்று இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வு அர்-றவ்ளதில் குர்ஆனிய்யா கலாபீடத்தின் அதிபர் மௌலவி எம்.ஏ.கலீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், அதிதிகளாக சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபை செயலாளரும், அர்-றவ்ளதில் குர்ஆனிய்யா கலாபீடத்தின் தலைவருமான மௌலவி எஸ்.இஸ்மாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளி ரீ.எல்.சுலைமாலெப்பை(மக்கீன்), மௌலவிகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அர்-றவ்ளதில் குர்ஆனிய்யா கலாபீடத்தின் மாணவர்களினால் மீலாத்து நபி விழாவை சிறப்பிக்கும் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.




0 Comments