வர்தா புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.
வர்தா புயல் காரணமாக பெய்த கனமழையால் நிறைய பொருட்சேதங்களும் உயிர்சேதங்களும் ஏற்ப்பட்டுள்ளன. வர்தா புயலால் சென்னையில் 4 பேரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தலா 2 பேரும் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலா ஒருவரும் பலியாகி இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் சென்னை மாநகரையே வர்தா புயல் தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. வர்தா புயலால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. சூறைக் காற்றினால் எண்ணற்ற கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
புயலால் சேதமடைந்த இடங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


0 Comments