(அஷ்ரப் ஏ சமத்)
வசந்தம் வானொலி அறிவிப்பாளரும் அட்டாளைச்சோனையைச் சசோ்ந்த கவிஞருமான ஏ.எம். அஸ்கரின் ”இந்த காலைப் பொழுது ” கவிதைத் தொகுதி நேற்று(17)ஆம் திகதி கொழும்பில் உளள் தபால் திணைக்களத்தின் கூட்ட மண்டபத்தில் சட்டத்தரணி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சா் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவா் ரவுப் ஹக்கீமும் கௌரவ அதிதியாக அமைச்சா் மனோ கனேசனும் கலந்து சிறப்பித்தாா்கள். மற்றும் உலக அறிவிப்பாளா் பி.எச். அப்துல் ஹமீத், கவிஞா் சாய்ந்தமருதுாா் திருமதி அனாா், இந்தியாவில் இருந்து வந்த சினிமாப் பாடல் எழுதும் யுகபாரதி, திரைப்பட இயக்குனா் மீரா கதிரவன், உதவி திரைப்பட இயக்குனா் ஹசீன், கலந்து கொண்டனா் நுாலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் ஏராளாமான இலக்கியவாதிகள், அறிவிப்பாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா்.
அமைச்சா் ரவுப் ஹக்கீம் உரையாற்றும்போது
அஸ்கரின் பிரசவ கவிதை அவருடைய ஓயாத உழைப்பு இக் கவிதையில் தெரிகிறது. யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் இவரது கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. நல்லதொரு கவிதை வாா்த்தைகளளை கோர்த்துச செல்கின்றது.
”ஆட்சி அதிகாரம்” என்ற கவிதையில் - ஆட்சி அதிகாரம் என்பது மிகவும் இலகுவானதொரு காரியமல்ல அந்த வகையில் இந்த மேற்கு உலகில் நீண்ட கால ஆட்சியாளா்கள் வரிசையில் என்னும்போது 30-40 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் ஜாம்பவனாக திகழ்ந்த ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைன்,, லிபியத் தலைவா் முஹம்மத் கடாபி, ஏகாதிபத்தியத்தை எதிா்ந்த்து நின்ற அன்மையில் மறைந்த கஸ்ரோ போன்றோ்கள் தொடா்ச்சியாக பல ஆண்டுகள் ஆட்சி செய்தவா்கள்.என கவிதைகள் தொட்டு பேசும்போதே இவ்வாறு அமைச்சா் ரவுப் ஹக்கீம் உரையாற்றினாா்.

0 Comments