வர்தா புயல் கரையை கடக்கும் போது 140 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
வார்தா புயல் சென்னைக்கு கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. சென்னையை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வரும் புயல் கரையை கடக்க தொடங்கிவிட்டது.
வர்தா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ. முதல் 140 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
வர்தா புயலின் பகுதி கரையை கடக்கத் தொடங்கிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புயலின் மையப்பகுதி பிற்பகல் 2 மணி முதல் கரையை கடக்க தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று மற்றும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து மற்றும் மின்சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. பழவேற்காட்டில் பலத்த காற்று வீசி வருகிறது. மீனவர்கள் கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. புயல் கரையை கடக்க சிலமணி நேரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளில் இருந்து இதுவரையில் 7357 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


0 Comments