Advertisement

Main Ad

விபத்துகளால் 7 நாட்களில் 70 பேர் பலி!

இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் வாகன விபத்துகளினால் 70 பேர் வரையில் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்றும் இன்றும் மட்டும் இலங்கையில் இடம்பெற்ற விபத்துக்குகளில் 17 பேர் பலியாகினர்.
இன்று காலை கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று பொலனறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் 12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.