(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடத்தில் 12 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த இரு மாதங்களில் 04 டெங்கு நோயாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்படுள்ளனர் என நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னேடுத்து செல்லும் பொருட்டு நாவிதன்வெளி பிதேசத்திலுள்ள அரச திணைக்கங்களின் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை இன்று அறிவூட்டும் வேலைத்திட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் அங்கு தொடர்ந்து உரையற்றுகையில்,
இருந்தபோதிலும் இனங்காணப்பட்ட நோயளர்கள் இப்பிரதேசத்திலிருந்து ஏனைய கொழும்பு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு, மருதமுனை போன்ற டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ள வெளிபிரதேசங்களில் தொழிலுக்காக சென்று வருபவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இது டெங்கு நேயளர்களாக இனங்கானப்பட்ட நோயளிகளின் வீடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு பர்வையிட்டு ஆய்வினை மேற்கொண்ட போதே தெரியவந்துள்ளது.
இதுவரை நாவிதன்வெளி பிரதேசத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்கள் இனங்காணப்படவில்லை. இதற்காக நாங்கள் கவனக்குறைவாக இருக்காமல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செயற்பட வேண்டும். எதிர்காலத்தில் கல்முனை மற்றும் ஏனைய பிரதேசங்களில் தீயாக பரவிக்கு கொண்டு வரும் டெங்கு நோய் எங்களுடைய பிரதேசத்திலுள்ள சிறார்களையும், இளைஞர்களையும், பெண்களையும் பாதிக்காமல் முன்னெச்சரிக்கையாக எடுத்தாக வேண்டிய காட்டாய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள 20 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் டெங்கு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கும வகையில் திணைக்களங்களில் கடமை புரியும் அரச உத்தியோகத்தர்களை எதிர்வரும் 19ஆம் திகதி மற்றும் 22ஆம் திகதியும் வீட்டுக்கு வீடு சென்று சகல வீடுகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையையும் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கையையும் மேற்கொள்ளும் போது நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் இனங்காணப்படுமாயின் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக தீர்மனித்துள்ளோம்.
இந்ந நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இந்ந பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே ஒவ்வொருவரையும் டெங்கு நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவில் டெங்கு நோயற்ற பிரதேசமாக நாவிதன்வெளி பிரதேசத்தினை மாற்ற மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அடுத்த வாரம் தொடக்கம் எமது பிரதேசத்திலுள்ள பாடசாலைகள், அரச திணைக்களங்கள், வீடுகள் போன்றவற்றிற்கு புகைவிசுறுதல் ஊடாக நுளம்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
நாங்கள் அன்றாட பாவனையில் பயன்படுத்தும் கழிவுப் பொருட்களை நாளந்தம் ஓழுங்கான முறையில் கழிவகற்றல் செய்வோம் என்றால் எமது குடும்பத்தையும், குழந்தைகளையும், அயலவர்களையும் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
0 Comments