– சம்மேளன ஊடகப்பிரிவு –
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளனத்தின் வழிகாட்டலில் மீராவோடை கிழக்கு சுப்பர் சலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மீராவோடை மேற்கு அல்-அமீன் இளைஞர் கழகம்,பதுரியா மாஞ்சோலை இக்பால் ஆகிய இளைஞர் கழகங்கள் ஒன்றினைத்து நடாத்திய மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்று போட்டி மீராவோடை அல்-ஹிதாயா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கோறளைப்பற்று மேற்கு இளைஞர் கழக பிரதேச சம்மேளன தலைவர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இடம் பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளனத்தின் பொருளாளர் எஸ்.எம்.நப்ராஸ் மற்றும் சுப்பர் சலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தின் தலைவரும் பிரதேச சம்மேளனத்தின் உறுப்பினருமான பீ.எம்.பஸ்லூன் ஆகியோரின் ஒழுங்கமைப்புடன் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச சம்மேளனத்தின் உறுப்பினர்கள், இளைஞர் கழகங்க அங்கத்தவர்கள் உள்ளிட்ட அதிகளவான பிரதேச இளைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இக் கரப்பந்தாட்ட சுற்று போட்டியில் எட்டு அணியினர் கலந்து கொண்டனர். ஆரை இறுதிச்சுற்று போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ளதாகவும் இரு அணிகள் இப் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சம்மேளன தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
இம் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்று போட்டியானது 2016ஆம் ஆண்டில் கடந்த 08.02.2016ஆம் திகதி புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளனத்தின் வழிகாட்டலில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




0 Comments