கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே பாம்பை கொஞ்சும் போது அனகோண்டா பாம்பு ஒன்று அவரை கடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கலந்து கொண்டார். அப்போது ஒரு கண்ணாடி பெட்டிகளில் பலவகையான பாம்புகள் வைக்கப்பட்டிருந்தது.
கண்ணாடி மட்டும் அணிந்து கொண்டு ஒவ்வொன்றாக வைக்கப்பட்டு இருந்த பாம்புகளின் கண்ணாடிகளில் தலையை விட்டு கொஞ்சினார்.
ஒரு கண்ணாடி பெட்டியில் அனகோண்டா பாம்பு குட்டி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அதில் தலையை வைத்து கொஞ்ச முயன்றார் வார்னே. திடீரென அனகோண்டா பாம்பு வார்னேவின் தலையில் கொத்தியது.
பாம்பு கடித்த உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அனகோண்டா பாம்புவிற்கு விஷம் இல்லை என்றாலும் உயிர் போகும் அளவிற்கு கடிக்க கூடியவை என்று கூறப்படுகிறது.
0 Comments