Advertisement

Main Ad

தமிழ் அரசர்கள் வாழ்ந்த இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் அங்கஜன் இராமநாதன் ..



 20.02.2016 நடைபெற்ற    உடுவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை தாங்கி உரை ஆற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தமிழ் அரசர்கள் வாழ்ந்த இடங்களில் ஒன்றாக காணப்படும் கந்தரோடை  கந்தரோடை பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதிகள் புராதன வரலாற்று சின்னங்கள்  தமிழ் அரசர்களின் அடையாளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதனால் அது தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு அகழ்வு ஆராட்சி செய்யப்பட்டு பொருள் சின்னங்கள் யாழ்ப்பான நூதன சாலையில் பேணப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்ள் பாதுக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்க்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்

மேலும் பல அரசியல் பிரமுகர்கள்  மற்றும் திணைக்கள தலைவர்கள் மற்றும் விவசாயிகள்  என பலரும்  கலந்து கொண்டு  தங்களுடைய  குறைநிறைகளை  சபையில்  தெரிவித்ததோடு குறிப்பாக  விவசாயிகள்  இந்த  முறை  நெற் செய்கையில் பாரிய  நட்டத்தை  அடைந்ததாகவும்  அதற்க்கு  காரணம்  வாய்க்கால் வழியாக நீர் ஓடாததை காரணம் காட்டினார்கள்  அதற்கு  பா .உ அங்கஜன் இராமநாதன் அந்த வாய்க்காலை திருத்துவதற்கு ஆவன செய்வதாகவும்  குறிப்பிட்டிருந்தார்





Post a Comment

0 Comments