Advertisement

Main Ad

கல்முனை அஸ் ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 75வது போட்டி!


கல்முனை அஸ் ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 75வது கிரிக்கெட் போட்டி நிகழ்வு மிகக் கோலாகலமாக நேற்று (20) சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்றது.
அஸ் ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எல்.எம்.சர்ஜூன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யூ.ஏ.கபார், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.சபூர்தீன் உள்ளிட்ட விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அஸ் ஸம்ஸ் விளையாட்டு கழகம் 75வது சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியினை கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகத்துடன் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.









Post a Comment

0 Comments