Advertisement

Main Ad

முதல் முறையாக தமிழ்மொழி மூல மருந்தக கலவையாளர் பயிற்சி நெறியை முடித்து வெளியானவர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு

அபு அலா -

இலங்கையில் முதல் முறையாக தமிழ்மொழி மூல மருந்தக கலவையாளர் பயிற்சி நெறியை முடித்து வெளியான 34 மருந்தக கலவையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திருகோணமலை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண சுதேசத்துறை ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், மாகாண சுகாதார, சுதேசஅமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே.உசைனுதீன், சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யு.எம்.வாஹிட் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டு பயிற்சியை முடித்து வெளியானவர்களுக்கான சான்றிதழ் மற்றும் சின்னங்களை அணிவித்தனர்.

இதேவேளை, மருந்தக கலவையாளர்களினால் அமைச்சருக்கு ஞாபகச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் சுதேச திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதரினால் வைத்திய பொறுப்பதிகாரிகளுக்கு ஞாபகச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. 





Post a Comment

0 Comments