(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை ஹிலால் சனசமூக நிலையம் ஏற்பாடு செய்யப்படட மகளிர் சங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஹிலால் சனசமூக நிலையத்தின் தலைவர் எஸ்.எல்.மக்கீன் தலைமையில் புளக் ஜே மேற்கு கிராம சேவகர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பிரதேச மக்களின் குறைபாடுகளை கேட்டரிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் என்னுடைய மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து அதிகமான நிதியினை மகளிர் சங்கங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது உறுதியளித்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
இதன்போது முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எம்.இப்றாகீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வித்தியாலய அதிபர் கே.சலீம், ஜாரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.அறபாத், ஏ.வீ.முகைதீன் வாவா (ராச தம்பி),அஸீஸ் ஆசிரியர், மாஹிர் பவுண்டேன் தலைவர் வை.வீ.சலீம், மகளிர் சங்கங்களின் பிரதிநிகள், பொது மக்கள், பிரதேச வாசிகள் என பலரும் கலந்துகொண்னர்.
0 Comments