அபு அலா -
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமுக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபெத்தி, மாகாண சபை உறுப்பினர்களும் இதில் பங்குபற்றினர்.
இங்கு கலந்துகொண்ட உயரதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,
தங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அரச ஊழியர்களின் இடமாற்றங்களில் எந்த அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது. தங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இடமாற்றங்கள் யாவும் மிகச் சரியான முறையில் அரச ஊழியர்களின் நலன்களை கருத்திற்கொண்டுதான் இந்த இடமாற்றங்கள் செய்யப்படுகின்றது. இந்நிலைமையில் அரசியல்வாதிகளினால் கொண்டு வரப்படுகின்ற இடமாற்றங்களைச் செய்யும்போது பாரிய சவால்களை நாங்கள் எதிர்நோக்கவேண்டியுள்ளது என்று கூறினர்.
இதற்கு சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறுகையில்,
அரச ஊழியர்களின் இடமாற்றங்களை நீங்கள் சரியாகத்தான் செய்து வருகின்றீர்கள். இருந்தும் அரசியல்வாதிகளினால் கொண்டு வரப்படுகின்ற இடமாற்றங்களும் குறித்த அமைச்சின் அமைச்சர்களுடன் சரியான முறையில் கலந்துரையாடப்பட்ட பின்னர்தான் இவைகள் இடம்பெறுகின்றது. அரசியல்வாதிகளும் பிழையான முறையில் இடமாற்றங்களைச் செய்ய முனையமாட்டார்கள் என்றார்.
இதேவேளை குறித்த அமைச்சின் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பற்றி தொடர்பிலும் மிக விரிவாக இங்கு ஆராயப்பட்டு இந்த விடயங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லல்வேண்டும் என்றும் ஆராயப்பட்டது.
0 Comments