Advertisement

Main Ad

டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா

(க.கிஷாந்தன்)


அட்டன் டிக்கோயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா, பக்தர்கள் புடைசூழ 21.02.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 20.02.2016 அன்று வேட்டைத் திருவிழா நடைபெற்றது.

அதனையடுத்து 21.02.2016 அன்றைய தினம் அம்பாள் சித்திரத்தேரில் ஆரோகணித்து, வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேவேளை 22.02.2016 அன்று தீர்த்தோற்சவம் நடைபெற்று எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் திருவிழா இனிதே நிறைவடையும்.





Post a Comment

0 Comments