அபு அலா -
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக கடமையாற்றிவிட்டுச் சென்றவர்களை பாராட்டி, வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று (21) காலை வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வைத்தியர்களான ஜே.யுசுப் எஸ்.எம்.எப்.பர்வீன், எம்.எப்.ஹஸான், எம்.பி.எம்.றஜீஸ், எப்.நைறோஸா, எம்.பாஹிம் மற்றும் வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் என பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 2 வருடங்களாக வைத்தியசாலையின் கடமைகளை தனது பணியென செய்துவிட்டு கடந்த வாரம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு இடம்மாற்றம் பெற்றுச்சென்ற எஸ்.முனவ்வர் என்ற அபிவிருத்தி உத்தியோகத்தரையும், வைத்தியசாலையின் காரியாலய கடமைகளை நேர காலம் பாராமல் தனது பணியை முன்னெடுத்துச் செய்துவிட்டு அக்கரைப்பற்று வலய பணிமனைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற எம்.உவைத்துல்லா ஆகியோரின் சேவைகளை பாராட்டி, வாழ்த்தி, ஞாபச்சின்னங்களை வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments