அண்மையில் உருவாக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டு காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்திகா எக்னெலிகொடவுக்கு, அச்சுறுத்தல் விடுத்தார் என்று அவர் மீது ஹோமகம நீதிமன்றத்தில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
முன்னர், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டம் சிறிலங்காவில் நடைமுறையில் இருக்கவில்லை.
அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, இந்தச் சட்டத்தின் கீழ் முதலாவது வழக்கை எதிர்கொண்டுள்ளவர் ஞானசார தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments