நேபாளத்தில் 23 பேருடன் காணாமற்போயிருந்த விமானம் விபத்திற்குள்ளாகி, அதிலிருந்த 23 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாரா எயார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் 20 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் நேபாளத்தில் உள்ள பொஹாராவில் இருந்து ஜாம்சன் என்ற இடத்தை நோக்கி இன்று புறப்பட்டுச் சென்றது.
குறித்த விமானம் சிறுது நேரத்திலேயே விமான நிலையத்துடனான தொடர்பை இழந்தது.
காணாமற்போன விமானத்தைத் தேடும் பணிகளில் 3 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
தற்போது அந்த விமானம் வெடித்து சிதறியதாகவும், அதில் பயணம் செய்த 23 பேரும் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேபாள விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
0 Comments