Advertisement

Main Ad

வடகிழக்கு இணைக்கப்படும் போது 9வது மாகாணமாக ‘தென்கிழக்கு முஸ்லிம் மாகாணம்’ உருவாக்கப்படல் வேண்டும்

(எஸ்.எல்.எம்.பழீல்,
பணிப்பாளர்,சமாதானம்,நல்லிணக்கத்திற்கான ஒழுங்கமைப்பு, மு.கா.ஸின் கல்வி,கலாசார செயலாளர்)
1. முகவுரை :
கடந்த 2015ல் ஏற்படுத்தப்பட்ட மைத்திரி- ரணில் தலைமையிலான புது யுகத்திற்குப் பிறகு இலங்கை அரசியலில் திருப்பங்களும் மக்களிடையே நம்பிக்கை எழுச்சிகளும் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன.சரித்திர காலத்திலிருந்து எமது நாடு 2000வருடகாலமாக மன்னர்கள் ஆட்சியிலும்,400 வருடங்களுக்கு மேலாக இந்நாடு காலனித்துவ ஆட்சியாளர்களினாலும் ஆளப்பட்டது. சுதந்திரம் கிடைத்து நம்நாடு 67வருடங்களைத் தாண்டிய போதிலும் இந்நாட்டில் வாழும் பல்சமய, பல்லின, பல்மொழி பேசும் இனங்களுக்கிடையே ஒற்றுமை சமாதானம், சகவாழ்வு பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்படவில்லை. மாறாக குரோத மனப்பாண்மை, இன முறுகல்கள், சந்தேகப்பார்வை என்பவற்றினால் இனங்களுக்கிடையிலான இடைவெளிகள் கூடிவந்திருப்பதுடன் இனரீதியான கலவரங்களும் விரோதங்களும் பாகுபாடுகளும் ஏற்படுத்தப்பட்டு வந்திருப்பதனை நாம் காணலாம். இனரீதியான பாகுபாடு, மொழிப்பிரச்சினை என்பவற்றைத் தீர்ப்பதற்காக ஏன்…. சாத்வீகரீதியான போராட்டங்கள் ஒப்பந்தங்கள் எல்லாம் தோல்வி கண்டநிலையில் 30வருடகாலம் ஒரு குரூர பயங்கர,இன யுத்தத்தினை ‘தமிழீழ விடுதலைப்புலிகள்'( டுவுவுநு ) தொடுத்து அது 2009ல் தோற்கடிக்கப்பட்டதனையும் நாம் காணலாம்.இந்த யுத்தமுடிவு துப்பாக்கிகளையும்,குரூர கன்னி வெடிகளையும், குண்டுகளையும் அமைதியாக்கியதே ஒழிய யுத்தத்தினால் சிதறுண்டு வேறுபட்ட மக்களிடையே அது இணைக்கப்பாட்டையோ,நல்லிணக்கத்தையோ,புரிந்துணர்வுகளையோஅது ஏற்படுத்தவில்லை.
சுதந்திர காலத்திலிருந்து 20க்கு மேற்பட்ட தேர்தல்கள் நடைபெற்று 15க்கு மேற்பட்ட அரசுகளும் 7ஜனாதிபதிகளும் 12பிரதமர்களும் இந்நாட்டை இரண்டு பிரதான கட்சிகளினூடாக மாறி மாறி; ஆட்சி செய்த போதிலும் இந்நாட்டில் இன ஒற்றுமையினூடாக சமாதான சகவாழ்வையோ ஒருங்கிணைந்த பொருளாதார மேம்பாட்டையோ ஏற்படுத்த முடியாமல் போனது.இந்த கைசேதமான துரதிர்ஷ்ட நிலைமைக்கு இன்றுவரையும் ஆண்டுவந்த ஆட்சியாளர்களே பொறுப்புக்கூறவேண்டிய அபாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்களை விட தமது சொந்த நலன்களையும்,அதிகாரங்களையும் எப்படி தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதே ஆட்சி நோக்கங்களாக இருந்து வந்திருக்கின்றன. அந்நோக்கத்தை எய்துவதற்காக பெரும்பான்மையை சந்தோஷப்படுத்தும் சட்டங்களை அமுல் படுத்துவதும் பாகுபாடான அரசியலமைப்புக்களை உருவகப்படுத்தி இனவிரிசல்களை விரிவாக்குவதுமே அவர்களின் குறிக்கோள்களாக செயற்பட்டு வந்திருக்கின்றன.
2.அரசியல் யாப்புகள் :
இந்நாட்டை கடைசியாக ஆண்ட பிரித்தானியரினால் அமுலாக்கப்பட்ட வெஸ்டமினிஸ்டர் முறையிலான பாராளுமன்ற தேர்தல் முறைமைகளும் 1972ல் கொண்டுவரப்பட்ட இலங்கை ஜனநாயக குடியரசு யாப்பு, 1978ல் ஜே.ஆரினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை யாப்பு, விகிதாசார தேர்தல் முறையையும் அடக்கிய கடந்த கால அரசாங்கங்கள் தம்மை பெரும்பான்மை இனத்தின் தயவோடு ஆட்சியில் தொடாந்தும் தக்கவைத்துக் கொள்ளும் உபாயங்களை மேற்கொண்டு வந்ததனை நாம் காணலாம்.
ஜே.ஆரினால் கொண்டுவரப்பட்ட அரசியலைமைப்பின் சரத்துகளை தமக்கேற்றவாறு திரிபுபடுத்தி கையிலே சட்டத்தை எடுத்து நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தி கடந்த 10வருடங்களுக்கு மேலாக அதிகார துஷ்பிரயோகம் செய்து நாட்டின் பொது வளங்களை தனது குடும்ப ஆடம்பரத்திற்காக பயன்படுத்திய ஒருவராகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நாம் பாhக்கின்றோம்.அவரின் ஆட்சியில் நிதி அமைச்சை தனது கையிலே வைத்துக்கொண்டு மொத்த வரவு செலவுத்திட்ட நிதியில் சுமார் 62 வீதமான (2014ல் ரூ.1652 பில்லியன்) நிதிகளின கட்டுப்பாடு மகிந்தவின் கையிலிருந்தது. இதனால் முறைகேடான ஊழல்களும், அராஜகமான செயற்பாடுகளும் இனவேறுபாட்டுக் கொள்கைகளும்தான் மகிந்தவின் ஆட்சியினுடைய முதுசங்களாக இருந்து வந்தன.ஆனால் புதிய நல்லாட்சி அரசாங்கம் உருவானவுடன் மைத்திரிபால ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் பட்ஜெட் நிதியில் 12வீத நிதி (2016ல்-ரூ. 377 பில்லியன்) ஆளுகையினை மட்டுமே கொண்டிருக்கின்றார்.நல்லாட்சியின் திடசங்கற்பத்திற்கு இது ஒன்றே போதுமானது. நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை உடன்மாற்றி நாட்டை புதுயுக ஐக்கிய பாதையில் இட்டுச்செல்லவேண்டும் என்ற திடசங்கற்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலவும்,- பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹவும் புதிய தேசிய கூட்டு அரசாங்கத்தை ஏற்படுத்தியிருப்பது இலங்கை அரசியல் வரலாற்றில் வரலாற்றுத் திருப்பமாகும்.
3.புதிய அரசியலமைப்பு :
( New Constitution) எந்த ஒரு நாட்டினதும் ஆக உயர்ந்தபட்ச சட்டஅமைப்பு அதன் அரசியல் யாப்பாகும். அரசியல் அமைப்பு என்பது ஒரு அரசுக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான மேன்மையான,உண்மையான சத்தியங்களுட கூடிய ஒரு ஒப்பந்தமாகும்.ஒரு நாட்டு மக்கள் தமது உக்கிரமான பிரச்சினைகள், அபிலாஷைகள், தேவைகளை குறிப்பிட்ட அரசியலமைப்பு தீர்த்து வைக்கவில்லை யென்றால் அந்த அரசியலமைப்பில் மாற்றத்தை அல்லது புதிய ஒரு அரசியல் அமைப்பை அம்மக்கள் வேண்டி நிற்பர். 1978ல் கொண்டுவரப்பட்ட தற்போதைய யாப்பு 19 திருத்தங்களைச் சந்தித்து திருத்தங்களை மேற்கொண்ட போதிலும் உண்மையான மக்களின் பிரச்சினைகளை அது தீர்க்கவில்லை. இந்த அரசியல் யாப்பின் மூலம் இனங்களுக்கிடையே உண்மையான சமாதானம்,புரிந்துணர்வு, சந்தேகமற்ற சகவாழ்வு, நல்லிணக்கம் என்பன ஏற்படுத்தப் படவில்லை.இந்நாட்டில் பூர்வீக,தாயக உரிமை அடிப்படைகளோடு நிம்மதியாக வாழும் சூழல் எல்லா இன மக்களுக்கும் ஏற்படல் வேண்டும். இந்ந அர்த்தமும் யதார்த்த உரிமைகளுடன் கூடிய புதிய அரசியல் யாப்பு இந்நாட்டிலே சிறுபான்மையினராக வாழும் தமிழ், முஸ்லிம்,கிறிஸ்தவர்களின் சமாதான இருப்பையும் சகவாழ்வையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
ஒரு அரசியல் யாப்பு உருவாக்கப்படும் போது அது பின்வரும் அடிப்படை சித்தாந்தங்கள், கொள்கைகளை, கொண்டதாக அமைய வேண்டும்.
1. மக்களின் ஒற்றுமை (ஒரே நாடு ஒரே மக்கள்)
11. மக்களுடைய மனித உரிமைகளில் வளர்ச்சியை அது உணர்த்த வேண்டும்
111. பொருளாதார உரிமைகள் மூலம்மக்களுடைய கௌரவத்தை
உறுதிப்படுததவேண்டும்;;.
1v. மக்கள் இறைமையை உயர்த்தி பாதுகாக்க வேண்டும்(சட்டங்களுக்கான நீதி
விமர்சனம்)
v. ஊழலற்ற சுதந்திர பொது நிர்வாகத்தை உருவாக்கல்
vi. நட்புடன் கூடிய மக்களுக்கான பொது சேவை
v11. மக்களின் கலாசார பாராம்பரியங்களை பாதிக்காத முறையில் நல்லாட்சியை
ஊக்குவித்தல்.

4. பன்முகத் தன்மை :
இலங்கை போன்றதொரு பல்மொழி, பல்லின, பல்மத நாட்டில் தத்தமது இன அடையாளம், சமய கலாசாரப்பெறுமதிகள்,பாதிக்கப்படாத முறையில் வேற்றுமையான சமுதாயங்களை ஒன்றுபடுத்தி ஒருங்கிணைந்த முயற்சிகளால் நாட்டின் சமாதானம், இறைமை, ஆள்புல உடைமைகளைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற தொணியில் முயற்சிகளை தேற்கொள்ளும் ஏற்பாடுகள் அரசியலமைப்பினூடாக செய்யப்படல் வேண்டும். இதற்காக எமது அரசியலமைப்பு மக்களின் ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான கடுமையான வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்.’நான் இலங்கையன் என்ற தீவிர உச்ச உணர்வு’மக்களிடையே உருவாக்கப்படல் வேண்டும். இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ‘நான் இந்தியன் என்ற தீவிர உணர்ச்சியின் மூலம்தான் இந்தியர்களிடையே ஒற்றுமையை பாதுகாக்க முடியும் என்பதை பிரகடனப்படுத்தினார்.
தென் ஆபிரிக்காவின் அரசியலமைப்பின் முகவுரையில் ‘தென் ஆபிரிக்கர்களாகிய நாங்கள்….தென் ஆபிரிக்கா அதில் வாழும் வேற்றுமையில்; ஒன்றுபட்டுள்ள எல்லா மக்களுக்குமுரியது என திடமாக நாம் நம்புகின்றோம்.’ என்று எழுதப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பு இலங்கைச் சமுதாயம் பல்லின, பல்மொழி, பல்மத பன்முகத்தன்மை கொண்ட தன்மையுடையது என்பதனை அங்கீகரிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி. சந்திரிகா அம்மையாரினால் 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பில் சரத்து 2(2)வது பந்தியில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. ‘அரசு இலங்கையின் சுதந்திரம்,இறைமை,ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதுடன் பல்லின,பல்மொழி,பல்மத பன்முகத் தன்மையை பாதுகாத்து அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையின் அடையாளத்தை பாதுகாத்து முதன்மைப்படுத்த வேண்டும்.’ இதேபோன்றுதான் 1987ல் கையொப்பமிடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையிலும் இலங்கைச் சமுதாயத்தின் பல்லினத் தன்மை வலியுறுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்நாட்டில் வாழும் எல்லா மக்களினதும் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார். ஒரு முறை பாராளுமன்றத்தில் அவர் பேசுகின்றபோது ‘இந்நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் தங்களது குறைபாடுகளும், துயரங்களும் முறையாக அரசினால் கவனிக்கப் படவில்லை, அவை தீர்த்து வைக்கப் படவில்லை என அவர்கள் தமக்குள்ளே உணர்கின்றபோது எவ்வாறு அவர்கள் இலங்கையர் என்ற உணர்வுடன் இந்நாட்டின் சவால்களை எதிர் கொள்ள அல்லது இந்நாட்டை தோளோடு தோள் நின்று கட்டியெழுப்ப முன்வருவர்? ….என்று கேள்வி எழுப்பினார்.
5. அடிப்படை உரிமைகள் :
இதேபோன்று எமது அரசியலமைப்பின் 3வது அத்தியாயத்தின் 12வது பிரிவு ஏனைய உரிமைகளோடு எல்லா பிரஜைகளினதும் சமத்துவமான தன்மையை வலியுறுத்துகின்றது.எல்லா உரிமைகள், சுதந்திரம் என்பவற்றிலுள்ள சமத்துவநிலை பற்றிக் கூறுகின்றது.இதேபோல் அரசியலமைப்பின் 10, 14வது பிரிவுகள் ‘சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகளை’ (ICCPR) அடியொட்டியதாக மதசுதந்திரத்தினைப் பற்றிக்கூறுகின்றது.இலங்கை அரசு 1980 ஜூன் 11ல் கைச்சாத்திட்டு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சரத்து 2(1) சரத்து 18 (1), 26 போன்ற’ சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள்’ (ICCPR) உடன்படிக்கைகளிலும் மனித அடிப்படை உரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.’மனித உரிமைகளுக்கான சர்வதேசப் பிரகடனம்'(UDHR) என்பவற்றிலும் இலங்கை கையொப்பமிட்டுள்ளது.சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் (UNHRC)  6ஃ37-9(ந) சர்வதேசப் பிரமாணங்களுக்கேற்ப மதஸ்தலங்கள்,வழிபாட்டுத் தலங்களினை பாதுகாக்கவேண்டிய சரத்துகளை அரசியலமைப்புகளில் உள்ளடக்கவேண்டுமென்று வலியுறுத்தப் பட்டுள்ளது.இதன்பிரகாரம் அரசியலமைப்பில்
1.ஒழுக்கமான சமய வாழ்வை முன்னெடுக்கும் உரிமை
11. உழைப்பு தேடலுக்கான உரிமை
111. கல்வி பெறுவதற்கான உரிமை
1v. வதிவிட,குடியிருப்புக்கான உரிமை
v.சுகாதார கவனப் பாதுகாப்புக்கான உரிமை
vi. தொழில் முறைமைகள், சமூக பொருளாதார ஒடுக்குதலிலிருந்து சுதந்திரம்,
பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.
இந்நிலை உருவாக நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தனது இறைமை, சுதந்திரம்,அடிப்படை உரிமைகள், மத பொருளாதார சுதந்திரங்கள் கௌரவம், தன்மானத்துடன் சமாதானமாக வாழும் சுழல் என்பன அரசியலமைப்பினூடாக உத்தரவாதத்துடன் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

6. பின்வரும் மிகவும் முக்கியமான திருத்தங்கள் ஃயோசனைகளை இந்த புதிய அரசியல் யாப்பு அடக்குதல் வேண்டுமென முன்மொழிகின்றோம்.

1.சமஷ்டியா? ஒற்றையாட்சியா? (Unitary/ Federal ) என்ற விவாதங்கள் ஏற்கனவே இரு துருவங்களாக வடக்கிலும் தெற்கிலும் மக்களிடையே கிலேஷங்களை உண்டு பண்ணியிருப்பதனால் இந்த விவாதங்களை விடுத்து நாட்டில் நல்லாட்சி,சமாதானம், சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு நாட்டின் இறைமை, சுயநிர்ணய உரிமை,அடிப்படை உரிமைகள் அதிகாரங்களை சமமாகப் பங்கிட்டு வழங்கி இந்நாட்டு மக்கள் எல்லோரும் தேசிய உணர்வோடு உற்பத்தி முயற்சிகளில் பங்கேற்று தோழோடு தோள் நின்று இந்நாட்டை கட்டி எழுப்புவதற்கான யோசனைகளாக இவற்றை நாம் முன்வைக்கின்றோம்.ஆயினும் உலக சனத்தொகையில் சுமார் 40மூமான மக்கள் 25 சமஷ்டி நாடுகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
11.தேசிய இனம் : பலமொழி பேசும் மக்கள் இந்நாட்டில் வாழ்வதனால் இனரீதியான, பிரதேச பாகுபாட்டை விடுத்து ‘நாம் எல்லோரும் இலங்கை நாட்டவர்’ என்ற பொதுவான அடையாளத்தினால் இனங்காணப்படல் வேண்டும். எல்லா சமூக மக்களும் ‘நான் இலங்கையன்’ என்ற அடையாளத்தை கூறுவதில் பெருமை கொள்ள வேண்டும். இந்த பல்லின, பல்மொழி, பல்மத பன்முகத்தன்மை ஒரு நாட்டிற்கு கிடைத்தற்கரிய வழம் என்பதை இந்திய நோபல் பரிசு அறிஞரான சென் வலியுறுத்தியுள்ளார்.
111.மொழி: சிங்களமும், தமிழும் உத்தியோக மொழிகளாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். தத்தமது மொழிகளில் எல்லாச் சமூகங்களும் தமது கல்வி,கலாசார,பொலிஸ் நீதிமன்ற நடைமுறைகள், கடமைகளை ஆற்றக்கூடிய முறையில் உறுதிப்படுத்தப் படல் வேண்டும். ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும், தமது தாய்ப்பாசைக்கு மேலதிக கட்டாய மொழியாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.
1V.மதம், சமய வழிபாடு: தமக்கு விருப்பமானமதத்தை எந்தப்பிரஜையும் சுதந்திரமாக, பின்பற்றி எந்த இடையூறுமின்றி பின்பற்றக்கூடிய உத்தரவாதம் இருத்தல் வேண்டும். அதற்காக வேண்டி தமக்குரிய வணக்கஸ்தலங்களை அரச அனுமதியுடன் அமைத்து ஒழுகக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும். தேவையில்லாத நிர்ப்பந்தங்கள், நிபந்தனைகள், இடையு_றுகளை தவிர்க்கும் நோக்குடன் இலங்கை ஒரு மத சார்பற்ற நாடு என்ற நிலையினை யாப்பில் உள்ளடக்க வேண்டும். எல்லா மதங்களுக்கும், மதஇஸ்தலங்களுக்கும் சமமான ஆதரவு, ஒத்துழைப்பு, நிதி ஒதுக்கீடு என்பன உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அரசாங்க அங்கீகாரமும், நியமனமும் பெற்ற சமயத்தலைவர்கள்எல்லா வணக்கஸ்தலங்களுக்கும் சமய கடமைகளுக்காக நியமிக்கப்படல் வேண்டும்.
V.கல்வி,பாடசாலைகள் : உலகின் நவீன சவால்களுக்கு முகங் கொடுக்கக் கூடிய தொழில்நுட்ப, தொழில் முயற்சி அடிப்படையிலான கல்வி முறை உருவாக்கப்படல் வேண்டும். நல்லிணக்க சகவாழ்வு, ஒற்றுமை செயற்பாடுகளில் நாட்டில் முன்னேற்றங்கள் உருவாக்கப் படும்போது சர்வதேச பொதுமொழியான ஆங்கிலத்தை பொதுவான கற்கை மொழியாகக் (Medium of Instruction); கொண்ட எல்லா இன மாணவர்களும் ஒரே கூரையில் அமர்ந்து கல்விபெறக் கூடிய பொதுவான பாடசாலைகள் இனரீதியான, பாகுபாடான பாடசாலைகளுக்குப் பதிலாக உருவாக்கப் படல் வேண்டும். இச்செயற்பாடு இன ஐக்கியம், நல்லிணக்க செயற்பாட்டை வலுப்படுத்தும்;;. மொழிப் பிரச்சினையும், இன ரீதியான பாடசாலைகளும்தான் இனப்பிரச்சினையின் உருவாக்க களம் என்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும்.
VI.தொழில் வாய்ப்புக்கள் : அரச தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் போது ‘போட்டிப் பரீட்சைகள்’ மூலம் திறமையானவர்களுக்கு நியமனங்கள் வழங்குவது உறுதிப்படுத்தப் படல் வேண்டும். இதில் இன, மத, மொழி,சமயப் பாகுபாடுகள் தவிர்க்கப் படல் வேண்டும். சிற்றூழியர் நியமனங்கள் நேர்முகப் பரீட்சை மூலம் வழங்கப்படலாம்.
VII. நாடாளு மன்றம்( Parliament)  67 வருடகால பாராம்பரியமுள்ள எமது நாடாளுமன்ற அமைப்பை வினைத் திறனுள்ள பலமான நாடாளுமன்றமாக மாற்றியமைப்பதற்கு பின்வரும் உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
1.சட்டவாக்க படிமுறைகளை தேர்ச்சிமிக்கதாக முன்னேற்ற வேண்டும்.
11.பாராளுமன்ற ‘மேற்பார்வை-கண்னாணிப்பு தொழிற்பாடு தாக்கமுள்ளதாக அமையவேண்டும்
111. பாராளுமன்ற ‘வரவு செலவுத்திட்ட, நிதிக்கட்டுப்பாடு மேற்பார்வை-கண்காணிப்பு தொழிற்பாடு தாக்கமுள்ளதாக அமையவேண்டும்
1V.எல்லா வகையான நாடாளுமன்றக் குழுக்களின் செயற்பாடுகளும் முன்னேற்றமானதாக அமைய வேண்டும்.
V. நாடாளுமன்ற செயலகத்தின் ஒட்டுமொத்த வினைத்திறன் செயற்பாடுகளும் தாக்கமுள்ளதாக அமையவேண்டும்.
இவ்வாறான செயற்றிறன் மிக்க நடவடிக்கைகளை யாப்பினுள் அடக்குவதன் மூலம்தான் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தமது அடிப்படை பணிகளான மக்களுக்கு சேவையாற்றும் ; (Representative function)  கடமை, நாட்டுக்கான சட்டமியற்றும் செயற்பாடு(Legislative function)  அரசை மேற்பார்வை செய்து கட்டுப்படுத்தும் செயல் (Controll function)  என்பனவற்றை நேர்த்தியாக செய்ய முடியும்.
நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பவர்களுக்குரிய- பிரதிநிதி ஆவதற்குரிய கல்வித்தகைமை பல்கலைக்கழக பட்டமாக நிர்ணயிக்கப்படல் வேண்டும். ஏனைய பிரதேச மாகாண சபைகளுக்கு இத்தகைமை ஜி.சி.ஈ. உயர்தரமாக இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியில் தெரிவாகும் ஒரு பிரதிநிதி கட்சி மாறுகின்றபோது அவரின் பதவி இழக்கப்படககூடிய ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். மக்களுக்கு தேர்தல் காலத்தின்போது கொடுக்கும் வாக்குறுதிகளை ஒரு பிரதிநிதி மீறுகின்றபோது அல்லது நிறை வேற்றாத விடத்து வாக்காளர்கள் அவரை நீதிமன்ற செயற்பாடுகள் மூலம் பதவி இறக்க வேண்டும்.
VIII. நிறைவேற்று அதிகார’செனட் மேல்சபை’ :
மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு மேலதிகமாக சட்டவாக்கத்திலும், நிதிக்கட்டுப்பாடு மற்றும் பல் துறைகளிலும் அனுபவமும் தேர்ச்சியும் கொண்ட, எல்லா சமூகங்களையும் பிரதி நிதித்துவப் படுத்தக்கூடிய கல்விமான்கள், 50க்கு மேற்படாத மூளைசாலிகள் அரசியலமைப்பு சபையினால்இந்த செனட் மேல் சபைக்கு நியமிக்கப் படலாம். இது சட்டமூலங்களை சரியாக, கட்டுப்பாட்டுடன் நிறை வேற்றுவதற்கான ஆலோசனைகளை நாடாளுமன்றத்திற்கு வழங்கும்.
IX. மாகாண நிர்வாகம் :
13வது திருத்தத்தில் சொல்லப்பட்டவாறு மாகாண சபைகள் உருவாக்கப் பட்ட நோக்கங்களை அமுல்படுத்தும் பொருட்டு அதற்கான சகல அதிகாரங்களும் யாப்பினால் குறித்துரைக்கப் படல் வேண்டும். 2015ல் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணையத்தினால் ; (UNHRC)  நிறைவேற்றப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள்,பொறுப்புக் கூறலுக்கு மேலதிகமாக நல்லிணக்க செயற்பாடுகளில் 13வது திருத்த அதிகாரப் பரவலாக்கலுக்கான சரத்துகள் அமுலாக்கமும் வலியுறுத்தப் பட்டுள்ளது.அத்துடன் காணிகளை மீழ ஒப்படைத்தல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை உண்டு பண்ணி பொருளாதார சாதாரணத் தன்மையை ஏற்படுத்தல் வேண்டுமென்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
X. புதிய தென்கிழக்கு மாகாணம் :
வடகிழக்கு தமிழ் பேசும் மாகாணம் உட்பட ஒன்பது மாகாணங்களின் நிர்வாக எல்லைகளும் மீண்டும் மீழ்நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.வடகிழக்குப் பிரச்சினையைமுடிவுக்கு கொண்டுவரும் நோக்கோடு வட கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகாரப்பரவலாக்கல் செய்யப்படுவதன் மூலம்தான் பிரச்சினைக்கு முடிவுகாண முடியும் என்பதுதான் அரசினதும் தமிழ் மக்களினதும்; இணக்கப்பாட்டு முடிவாக இருந்தால் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தமது நிபந்தனையுடனான ஒப்புதலை அதற்கு வழங்குவார்கள்.ஆனால் அம்மக்களின் சுய நிர்ணயம் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய முறையிலான ‘தென்கிழக்கு மாகாணம்’ ஒன்பதாவது மாகாணமாக பொத்துவில்,கல்முனை, சம்மாந்துறை தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்படல் வேண்டும். இம்மாகாண நிர்வாகத்தோடு கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி,ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளும்,திருகோணமலை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களான கிண்ணியா,மூதூர்,புல்மோட்டை உட்பட ஏனைய முஸ்லிம் பிரதேசங்களும் அலகுகளாக தென்கிழக்கு மாகாண நிர்வாகத்தோடு இணைக்கப்படல் வேண்டும்.
ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இதனை சாத்தியப்புடுத்துவதற்காக ‘இந்திய பொண்டிச்சேரி மாதிரியை'(ஐனெயை’ள Pழனெiஉhநசசல ஆழனநட) முன்வைத்துள்ளது.புதிய தென்கிழக்கு மாகாணத்தோடு மட்டக்களப்பு,திருகோணமலை, மாவட்டங்களுடன் வடமாகாணத்தில் வன்னி, யாழ்ப்பாணத்தில் குடிவாழ்கின்ற முஸ்லிம்களின் நிர்வாகங்களையும் பொண்டிச்சேரி மாதிரியில் இணைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.இந்தியாவில் பிரெஞ்சு அரசுக்குரிய பொண்டிச்சேரி,காரைக்கால், ஏனம்,மாஹே பிரதேசங்களும் போர்த்துக்கல்லுக்குரிய கோவா,டமான் டியு வும் இவ்வாறு நிலத் தொடர்பற்ற பகுதிகளாக நிர்வகிக்கப்படுகின்றன.
1954ல் இந்தியப் பிரதமர் நேருவின் விஷேட பிரகடனத்தின் மூலம் இந்த நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இன்னும் இந்த எல்லைகளைக்கொண்ட வேறுபட்ட மாநிலங்களிலுள்ளபிரதேசங்கள் (ருnழைn வுநசசவைழசல)ஒரே நிர்வாகத்தில் இயங்குகின்றன. பொண்டிச்சேரி, காரைக்கால் என்பன தமிழ் நாட்டிலும், ஏனம் கேரள மாநிலத்திலும், மாஹே ஆந்திர மானிலத்திலும் புவியியல் அமைவைக் கொண்டிருந்த போதிலும் வேறான ஆளுனர்களினால் அவை நிர்வகிக்கப் படுகின்றன. ஆகவே கிழக்கில் அம்பாரை மாவட்டம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் வடக்கிலே வன்னி, யாழ் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் புவியியல் ரீதியாக பரந்து வாழ்வதனால் இவற்றின் அதிகாரங்களை பங்கீடுசெய்து நிர்வகிப்பதற்குரிய மாதிரியாகவே பொண்டிச்சேரி மாதிரி முன்வைக்கப் பட்டுள்ளது.
மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்த முஸ்லிம் பெரும்பாண்மை மாகாணக் கோரிக்கையை முன்வைத்த போதுஅதில் முஸ்லிம்கள் 58மூ மாகவும்,தமிழர்கள் 28மூ மாகவும், சிங்களவர்கள் 14மூ மாகவும் இருப்பரென சுட்டிக்காட்டினார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே மாகாணமாக அமைகின்றபோது 33மூ வீதமாக இருக்கும் கிழக்கு முஸ்லிம்களின் நிலைமை 17மூதத்திற்கு குறைவடைகின்றது.இந்த இழப்பை ஈடுசெய்வதற்காகவும், வடகிழக்கு முஸ்லிம்களின் இருப்பு, சுதந்திரம், சுயநிர்ணயம், அதிகாரப் பங்கீடு, வாழ்வாதாரங்கள் என்பவற்றை உறுதிசெய்வதற்காகவும்தான் இந்த தென்கிழக்கு மாகாண கோரிக்கை ஏற்பாடு முன்வைக்கப் பட்டது. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்ற அக்கரைப்பற்று, நிந்தவூர்,சம்மாந்துறை, கல்முனை ஆகிய பகுதிகளில் தமிழர்கள் தனியான பிரதேச செயலகம், பிரதேச சபைகளை உருவாக்கி தனியான நிர்வாகத்தில் பிரிந்து போன பின்னணியும் இங்கு கரிசனைக்குரியதாகும்.
புரையோடிப்போன தமிழ் மக்களின் வடகிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கமுற்படுகின்ற போது மற்றுமொரு சிறுபாண்மையினரான, இந்நாட்டில் 1000 வருடங்களுக்கு மேற்பட்ட பூர்வீக வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் சுயநிர்ணய அடிப்படையிலான வதிவிட வாழ்வாதாரப் பிரச்சினைகளும் புதிய அரசியல் யாப்பினூடாக தீர்த்து வைக்கப் படல் வேண்டும் என்பதே அடிப்படையாகும். வடகிழக்கு இணைப்போடு வடமாகாணத்தோடு மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் பகரமாக ( quid pro quo ) இணைக்கப்படுகின்றன.இந்த ஏற்பாடுகள், சுழற்சி முறையிலான நிர்வாக அதிகார அலகு பற்றிய விடயங்களைத்தான் எமது சமகாலத் தலைவர் கௌரவ.றஊப் ஹக்கீம் அவர்கள் தமிழ் தரப்பினரோடு சிநேகபூர்வ பேச்சுக்களை நடாத்தி வருகின்றார்.
XI. தமிழ்-முஸ்லிம் புரிந்துணர்வு:( Mutual Understanding )
வடகிழக்கு தமிழ்பேசும் மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பூர்வீக தாயக நிலங்களாகும்.வடகிழக்கில் இரண்டறக்கலந்து வாழும் இரு இனங்களும் தமிழைத் தாய் மொழியாக கொண்டிருக்கின்றன.இவ்விரு இனங்களின் பூர்வீக வரலாற்றை இன்னும் இப்பிரதேசங்களில் அழிந்தும் எஞ்சியிருக்கின்ற சமூக குடிமுறைமைகளும் கலாசார பாராம்பரியங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சுதந்திரம் கிடைத்து 67வருடங்களை நாம் கடந்திட்ட போதிலும் இன்னும் அடிப்படை உhமைகளையும், சமத்துவத்தையும்,சுயநிர்ணய உரிமையினையும், பெறமுடியாத அவலநிலையிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்.தமிழ்த் தலைவர்களின் சாத்வீகப் போராட்டங்கள் மட்டுமல்லாது 30வருடகால ஆயுதப் போராட்டமும் எந்தவிதமான சமாதான சுயநிர்ணய அடிப்படைகளை எமக்குப் பெற்றுத்தரவில்லை.மாறாக அழிவுச்சின்னங்களும்,அவலங்களுமேக எஞ்சின. தமிழ்-முஸ்லிம் இனங்கள் சந்தேகம், இனமுறுகல், இனக் குரோதங்களால் வஞ்சிக்கப்பட்டு அவசியமற்ற கலவரங்களையும் கசப்பான அனுபவங்களையும கடந்தகாலங்களில்; எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது.
விடுதலைப்புலிகளின் இனச்சுத்திகரிப்பு பாகுபாட்டினால் வடகிழக்கு முஸ்லிம்களும் அழிவுகளையும் கசப்புணர்வுகளையும், உயிர் உடமை இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. இந்த வரலாற்றுப்பின்னணிகள் மாறி மாறி ஒரே யதார்த்தபூர்வமான உன்மைச் செய்தியைத்தான் எமக்கு பாடமாக உரைத்து நிற்கின்றன.எமது இரண்டு இனங்களும் இந்நாட்டு இனப்பரம்பல் பின்னணிகளை கருத்திலே கொண்டு இரண்டறக்கலந்த புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மைகளோடு இன்னும் இயங்க முற்படாவிட்டால் நாம் எதையுமே எப்போதும் பெற முடியாது என்ற யதார்த்தத்தை இப்போதாவது நாம் விளங்கவேண்டும்.முதலில் எமக்கிடையேயுள்ள சிறு சிறு தகராறுகளை தீர்த்துக் கொண்டு எமது தேசியப்பிரச்சினைக்கான தீர்வையும், சுய நிர்ணயத்தையும் ஆட்சியாளர்களிடமிருந்து ஒருமித்தவகையில் பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.இரண்டு இனங்களும் சுய நிர்ணய அதிகாரப்பரவலாக்கலை வடகிழக்கில் சாத்தியப்படுத்த வடகிழக்கு இணைப்பையும் அதற்கு பகரமாக தென்கிழக்கு மாகாண பிரகடனத்தையும் கோரிநிற்கவேண்டும். இந்த வாய்ப்பை தவற விடுகின்றபோது தொடர்ந்தும் இந்நாட்டில் பாதிக்கப்படப் போவது பெரும்பாண்மையல்ல, ஆனால் எமது இரு சமூகங்களும்தான்; என்ற பாடத்தினை எமக்கு வெள்ளிடை மலையாக, சுதந்திரம் கிடைத்து67வருடகால வரலாறு புகட்டிநிற்கின்றது.
XII. வாக்குரிமை :
தேர்தல்களின் போது கண்காணிப்பில் ஈடுபடுகின்ற உள்நாட்டு வெளிநாட்டுக் குழுக்கள் பல விதமான மோசடிகள், ஆள் மாறாட்டங்களை அறிக்கையிட்டும் கூட அவற்றிற்காக போதிய நடவடிக்கைகள் கடந்த காலங்களில் எடுக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்பில் இந்த மோசடிகளில் ஈடுபடுவோருக்கெதிராக கடும் தண்டனைகள் எடுக்கும் வகையில் சரத்துகள் உள்ளடக்கப் படவேண்டும். வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் தற்காலிகமாக குடிபெயர்ந்துள்ள இலங்கைப் பிரஜைகளுக்கும் தூது வராலயங்களுடாக தேர்தலில் வாக்களிக்கும் ஏற்பாடுகளும உள்ளடக்கப் படல் வேண்டும்.
XIII: புதுயுக நல்லாட்சி : (Good Governance)
2015 ஜனவரியில் மதிப்பு மிகு மைத்திரி பால சிறிசேன அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட அமைதிப் புரட்சியின் மூலம் இந்நாட்டு மக்கள் மத்தியிலே குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியிலே நம்பிக்கைகளுடன் கூடிய புதுயுகம் மலர்ந்திருக்கின்றது.இந்த எதிர்பார்ப்புகளை சாத்திய மாக்கும் நோக்கோடுதான் கௌரவ.ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமர் பதவியை ஏற்றதுடன் இரண்டு பெரும்பாண்மை கட்சிகளையும் இணைத்த தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்று முழு உலகமும் இலங்கையை நோக்கிய பார்வையை செலுத்தி வருகின்றன. முதலீட்டு முயற்சிகள் குவிந்த வண்ணமிருக்கின்றன.நிதி அமைச்சர் 12 பில்லியன் டொலர் முதலீடுகள் நாட்டிற்கு வரவிருப்பதாக நம்பிக்கை வெளியிட்டு முயற்சிக்கின்றார். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தீவிர மாற்றங்களைக் கண்டு வருகின்றது. இலங்கையை சமாதான முதலீட்டு பூமியாக, பொருளாதார கேந்திர நிலையமாக உலகம் எமது நாட்டையும நாடும்; காலம் வெகு தூரத்திலில்லை. புதிய யாப்பு மாற்றத்தினூடாக இந்ந சவால்மிக்க பயணத்தை முன்னெடுக்க அரசுக்கு எமது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டியது ‘நாம் எல்லோரும் இலங்கையர்’ என்ற அடையாளத்தின் எடுத்துக்காட்டாகும்.

Post a Comment

0 Comments