தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நால்வரையும் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜாவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் சந்தேகநபர்கள் நால்வரும் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் நள்ளிரவு ஆராதனையில் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
0 Comments