Advertisement

Main Ad

எச்சரிக்கை ! நாட்டில் ஒருவித தோல் நோய் பரவுகிறது

பூச்சிகளால் பரவும் ஒருவிதமான தோல்நோய்  நாடளாவிய ரீதியில் பரவிவருவதாக பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன தெரிவித்தார்.
" லீஸ் - மெனய்சிஸ்" எனப்படும் குறித்த நோய் குணப்படுத்த சில நாட்களாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த தோல் நோய் இந்தியாவில் பொதுவாக காணக்கூடியதாக உள்ளதாகவும், அண்மைய காலங்களில் இதன் தாக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.