Advertisement

Main Ad

முஸ்லிம்களுக்கு தடை விதிக்கக் கோரிய டொனால்ட் ட்ரம்ப் பிரிட்டனுக்கு வருவதற்கு தடை விதிக்க கோரி 370,000 பேர் கையெழுத்து

அமெ­ரிக்­கா­வுக்குள் முஸ்­லிம்கள் நுழை­வ­தற்குத் தடை விதிக்குமாறு வலியுறுத்திய அந்­நாட்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற டொனால்ட் ட்ரம்­ப், பிரித்­தா­னி­யாவுக்குள் வருவதற்கு எதிரான மகஜரில் இது­வ­ரையில் 370,000 ஆயிரம் பேர் கையெ­ழுத்­திட்டுள்­ளனர்.

எந்­த­வொரு மனுவும் சுமார் 100,000 பேரின் கையெ­ழுத்­து­க­ளுடன் நிறை­வேற்­றலாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

அண்­மையில் பாரீஸில் ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலைத் தொடர்ந்து அமெ­ரிக்­கா­வுக்குள் முஸ்­லிம்கள் நுழையத் தடைவிதிக்க வேண்டுமென டொனால்ட் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­தினைத் தெரிவித்­தி­ருந்தார்.

அவ­ருக்­கெ­தி­ராக பலர் தமது கண்­ட­னங்­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர். இந்­த­நிலையில் பிரித்­தா­னி­யாவில் கையெ­ழுத்­திட்டு அவ­ருக்­கெ­தி­ரான தமது மனுக்­களைப் பதிவு செய்­துள்­ளனர். 

டொனால்ட்டின் சர்ச்­சை­யான கருத்­திற்­கெ­தி­ரான கருத்­துகள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அறை­கூவல் விடுப்­பது அமெ­ரிக்­காவின் பாது­காப்­புக்கு உகந்­த­தல்ல என அமெ­ரிக்க இரா­ணுவத் தலை­மை­ய­கமும், இந்தக் கருத்தை வெளி­யிட்­டதன் மூலம் அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாகும் தகு­தியை ட்ரம்ப் இழந்­து­விட்­ட­தாக ஜனா­தி­பதி மாளி­கையும் தெரி­வித்­தி­ருந்­தது.

இது தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி - மூன் கூறு­கையில், "தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது அறை­கூ­வல்கள் விடுப்­பது எல்லா நாட்­டிலும் சகஜம்.

ஆனாலும், தஞ்சம் கேட்டு வரும் பிற நாட்டினர் மீதும், மதத்தினர் மீதும் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது கண்டனத்துக்குரியது'' என கூறியுள்ளார்.