எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது என பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரகொடி இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆயினும் எரிபொருள் விற்பனைக்கான செலவு சம்பந்தமான பொறிமுறை ஒன்றை எதிர்வரும் மாதத்தின் முதல் பகுதியில் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஏனைய எரிபொருள் திணைக்களங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூபா 2,500 கோடி எனவும், திணைக்களத்தின் கடன் ரூபா 47,400 எனவும் அவர் தெரிவித்தார்.