சட்டவிரோதமாக ஒருதொகை பணம் மற்றும் கிரடிட் கார்ட்டுகளை துபாய்க்கு கடத்த முற்பட்ட கல்முனை பகுதியைச் சேர்ந்த( 32) வயதான நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை துபாய் நோக்கி புறப்படவிருந்த ஈ.கே 653 ரக எமிரேட்ஸ் விமானத்தில் செல்ல முற்பட்டபோதே இவ்வாறு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 109 கிரடிட்காட்கள் மற்றும்25,770 திர்ஹம், இலங்கை நாணயப்படி 10 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவருக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சுங்க பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.