Advertisement

Main Ad

அபிவிருத்தி திட்டத்தில் அரசியல் பாகுபாடுகள் பார்ப்பதில்லை எல்லோரும் இலங்கையர்கள் - சுகாதார அமைச்சர் நஸீர்...( படங்கள் )


வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 வரிய குடும்பங்களின் வீட்டுப் பூச்சு வேலைக்காக தலா 10 சீமெந்து பக்கெட்டுகள் வீதம் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கீழுள்ள 32 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கின்ற மிக வரிய 56 குடும்பங்களுக்கு சீமெந்து பக்கெட்டுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை (10) பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான சீமெந்து பக்கெட்டுகளை வழங்கிவைத்து உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1000 குடும்பங்களும் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர், அவர்கள் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்றெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும், தலைமையின் கீழுள்ள அரசியல்வாதிகளும் ஒருபோது எந்த வேறுபாடுகளையும் காட்டியதுமில்லை, பார்க்கப்போவதுமில்லை.

கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கும்போது, அங்கு இனமத பேறுபாடுகளையோ அல்லது கட்சி பாகுபாடோ ஒருபோதும் நாங்கள் பார்ப்பதில்லை. எல்லோரும் இலங்கையர்கள். அவர்கள் எமது நாட்டின் பிரஜைகள் என்றுதான் பார்த்து தங்களில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயிம், இணைப்பாளர் ஏ.எல்.அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச உதவி செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், அம்பாறை மாவட்ட கரையோர வீடமைப்பு முகாமையாளர் ஏ.அஸீஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சீமெந்து பக்கெட்டுகளை வழங்கிவைத்தனர்.