கல்முனை மாநகர பிரதிமேயரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவருமான AL.அப்துல் மஜீத் அவர்களின் அதிரடியான நடவடிக்கை காரணமாக இன்று 2015.12.11 ம் திகதி சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் பின் பாதை மற்றும் கூபா பள்ளிவாசல் அருகாமையிலும் இன்னும் முகத்துவாரத்திற்கு அருகாமையில் உள்ள கடற்கரை வீதியிலும் மிக நீண்ட நாளாக கவனிப்பாரற்று கிடந்த பாரியளவான குப்பை மேடு ஒன்று அகற்றப்பட்டது.
இக்குப்பைகளால் அப்பிரதேச மக்கள் மற்றும் பாதையில் போக்குவரத்தினை மேற்கொள்ளும் மக்கள் என்று பலருக்கு சுகாதார ரீதியிலும் போக்குவரத்திற்கும் பாரியளவிலான இன்னல்களையும் எதிர்கொண்டிருந்தனர் அதனை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் கல்முனை மாநகர பிரதிமேயருக்கு அறிவித்தனர் அதனை அடுத்து தலத்திற்கு விரைந்த கல்முனை மாநகர பிரதிமேயர் AL.அப்துல் மஜீத் அவர்கள் உடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தமைக்கு இணங்க உடன் அக்குப்பைகள் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர பிரதிமேயர் AL.அப்துல் மஜீத் அவர்களால் அப்பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.