
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….
அட்டனிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் அட்டன் கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த பயணிகளில் 20 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட பின்னர் இதில் மேலதிக சிகிச்சைக்காக 4 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்தோடு இவ்விபத்தில் மேலும் இருவர் படுங்காயம்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.