Advertisement

Main Ad

பேச்சுக் கொடுத்தால் பிரேக் இல்லா ஆக்களுக்கு SMS அனுப்பி இலகுவாய் தப்பலாம்



SMS
++++++
சதக் காசுக்கு                                 

சந்தையில் வாங்க
இதப் போல இங்க
இன்னொன்று மலிவில்லை.

பேச்சுக் கொடுத்தால்
பிரேக் இல்லா ஆக்களுக்கு
SMS அனுப்பி
இலகுவாய் தப்பலாம்
உரத்துக் கத்தி
உரையாட முடியாட்டி
சைலண்டா வேலையை
சாதிக்க உதவும்
வாய் விட்டு சொல்லா
வகையறா விடயங்களை
மனம் விட்டு சொல்ல
மார்க்கமாய் அமையும்
ஆங்கிலத் தமிழ் என்னும்
அரை குறை மொழியொன்று
ஓங்கி வளர
உதவிய சேவை
கண்ணயர்ந்து தூங்கையில்
கணீரென்று அடிக்கும்
என்னவென்று பார்த்தால்
இழவு விளம்பரம்
விலைக் கழிவு message களால்
வெறிச்சோடும் purseகள்
அலைக் கழிக்க வைக்கும்
அழைப்பு SMSகள்
குறுந் தகவல் சேவையால்
இருந்த உறவு வளர்வதும்
அறுந்த உறவு தொடர்வதும்
சிறந்த சேவை எனினும்
மருந்து போல் பாவித்தலே
சிறந்ததாய் அமையும்.