நிந்தவூர் கமுஃஅல்-மதீனா மகா வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் வாசிப்பு மாதக் கொண்டாட்டங்கள் ஆசிரியர்களின் வழிகாட்டலில், மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.கல்லூரி பிரதி அதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதியூ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், கல்லூரி முதல்வர் எஸ்.அஹமது ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பாடசாலை மைதானத்தைச் சுற்றியுள்ள மரங்கள் யாவும் காற்றடைத்த பந்துகளால் அலங்கரிக்கப்பட்டு, வாசிப்புக் கொட்டகைகள், திறந்த வெளி நூலகம் என்பன அமைத்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


