
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் 03 பேருக்கு அதிகமாக ஏற்றிச்செல்லக் கூடாதென்ற போக்குவரத்துச் சட்டம் அமுலிலுள்ளது. ஆனால், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் மூன்று பேருக்கு மேல் ஏற்றிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது. இது போக்குவரத்துச் சட்டத்தை மீறும் செயலாகும். அவ்வாறு முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் மூன்று பேருக்கு மேல் ஏற்றிச்சென்றால் தண்டம் செலுத்த வேண்டும். அல்லது நீதிமன்றத்தில் முச்சக்கரவண்டிச் சாரதியை கொண்டு ஆஜர்படுத்த வேண்டிவரும்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் போக்குவரத்து ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும். இதேவேளை, பாதசாரிகள் வீதியை கடக்கும்போது மஞ்சள்; கடவையின் ஊடாக கடக்க வேண்டும். அவ்வாறு மஞ்சள் கடவையினூடாக கடக்காதவர்கள் தண்டம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்'
