இவருடைய உடல் நலத்தினைக் கருத்தில் கொண்டு இவருக்கு உதவி வழங்குமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

26 வயதான முருகேசு சசிகுமார் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்றிருந்த வேளை, இரண்டு சிறுநீரகங்கங்களும் செயலிழந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார்.
வைத்தியர்கள் 3 திகதிகள் கொடுக்கப்பட்ட போதும், இவரால் சத்திர சிகிச்சையைச் செய்ய முடியவில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளார்.
இறுதிச் சந்தர்ப்பம் டிசம்பர் இறுதிக்குள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வாரத்தில் இரண்டு தடவைகள் இரத்தச் சுத்திகரிப்பு வேலைகள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இவருக்கு உதவிகள் வழங்குமாறு சமூக சேவைகள் திணைக்களத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

