Advertisement

Main Ad

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் ஆகியோருக்கு அழைப்பு



வடக்கு கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் சம்மந்தமான விடயங்கள் தொடர்பாக இன்று மதியம் 2.00 மணிக்கு ஜனாதிபதிச் செயலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு  இலங்கை முஸ்லிம்களின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதித் தலைவரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விரிவாக பேசப்படவுள்ள இந்நிகவில் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 குறிப்பிட்ட இக்கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மற்றும் பல அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.