கட்சியின் தலைமை இந்த அமைச்சுப் பதவியை எனக்குத் தரவில்லை என்றால் நான் இன்று சுகாதார அமைச்சராக இருக்கமுடியாது. கட்சியின் தலைமை எனக்கு என்ன கட்டளையை பிறப்பிக்கின்றதோ அதற்கு நான் கட்டுப்பட்டவனாக இருக்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் மத்திய குழுவின் சிரேஷ்ட தலைவர் ஏ.எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இறக்காமம் மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று புதன்கிழமை (11) சுகாதார அமைச்சிக்கு வருகைதந்து சந்தித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சுகாதார அமைச்சர் பதவியெற்ற தினத்திலிருந்து இற்றைவரைக்கும் நான் பாரிய சவாலுக்கு மத்தியிலும், இக்கட்டான நிலைமைக்கு மத்தியிலும்தான் இருந்து வருகின்றேன். அந்தளவு எனது செயற்பாடுகள் உள்ளன.
இந்நிலைமையில், நான் சரியாக தூங்கவில்லை அந்தளவு எனது அமைச்சின் கடமைகளும், பொதுமக்களின் சந்திப்புக்களும் இடம்பெற்று காணப்படுகின்றது. எனது நாளாந்த தூக்கமாக சுமார் 4 மணித்தியாலயங்களாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் நான் மாகாண சபை உறுப்பினராக இருக்கும்போது இந்தளவு இருந்ததில்லை. ஒரு உறுப்பினருக்கும் அமைச்சருக்கும் உள்ள பொறுப்புக்களை முன்னெடுப்பது என்பது ஒரு பாரிய சவாலாக அமைந்து காணப்படுகின்றது என்றார்.
இச்சந்திப்பில், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.எம்.ஜபீர் மௌலவி, முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எல்.முஸ்மி, யூ.எல்.ஜிப்ரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எஸ்.எல்.நிசார் மற்றும் மத்திய குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கெற்றிருந்தனர்.