Advertisement

Main Ad

சோபித தேரரின் மறைவு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரழிப்பாகும்...

நாட்டின் நல்லாட்சிக்கு பங்களிப்பு செய்தவரும்இன ஐக்கியத்துக்காக பாடுபட்டவருமான மாதுலுவாவ சோபித தேரரின் மறைவு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரழிப்பாகும் என அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் அல்-ஹாஜ் முஹம்மட் ஹனீபாதெரிவித்துள்ளார்.

வண.மாதுலுவாவ சோபித தேரரின் மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் ஆட்சியாளர்கள் நேர்மையாக செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் சேவைகள் நாட்டின் அடிமட்ட வறிய மக்கள் வரை சென்றடையவேண்டும் என்ற நன்நோக்கத்தோடு பணியாற்றியவர். எந்த துன்பங்கள் வந்தாலும் அதற்காக சழைத்துவிடாமல் மிகத் துணிவோடு நின்று சேவையாற்றிய பெரும் துறவியை இன்று நாட்டு மக்கள இழந்துள்ளனர்.

தற்போதைய நல்லாட்சியை கொண்டுவருவதற்காக பல சவால்களுக்கு முகம் கொடுத்தவர். தவறு செய்யும் ஆட்சியாளர் எவராக இருந்தாலும் தையத்துடன் தவறை சுட்டிக்காட்டத் தயங்காதவர்.

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட பொதுபல சேனாவினை நேரடியாக கண்டித்ததோடு முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களுக்கு பக்கபலமாக செயற்பட்டவர். நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக அரங்கேற்றப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் தமிழ்முஸ்லிம்சிங்கள மக்களின் ஒற்றுமைக்காக ஒரு செயற்பாட்டாளராக செயற்பட்ட மனித நேயம் கொண்டவர்.


மக்கள் பக்கம் நின்று சேவையாற்றிய இந்த பெரும் மனிதரை நாட்டின் பல்லின மக்களும் இழந்துள்ள நிலையில் அரசியல்வாதிகளிடமும் மக்கள் நலத் திட்டங்களை மிகத் தெளிவாக முன்வைத்தவர். இதனால் இன, மத,பேதமற்ற அடிப்படையில் இன்று நாட்டு மக்கள் அனைவரும் பெரும் சோகத்துடன் இருக்கின்றனர். இவ்வாறான நல்லவர்களை இந்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக எமது  அகில இன நல்லுறவு ஒன்றியமும் அயராது மிக நீண்டகாலமாக உழைத்து வருகிறது.  

இவ்வாறு நாட்டு மக்களையும் நாட்டையும் சிந்தித்து செயற்பட்ட ஒரு தலைமையை நாம் இழந்துள்ளோம்இவரது இழப்பினால் துயருறும் மக்கள் அமைதியடைவதோடு இவரது நற்குணங்களை நாமும் எமது வாழ்வியல் விடயங்களில் பினபற்ற முனையவேண்டும். துயருற்று இருக்கும் அனைவருக்கும் எமது அமைப்பு சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.