மாத்தறை வெவஹமன்துவ பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒரு வர் தனது காதலியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர் வௌஹமன்துவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதி எனவும் தற்கொலை செய்து கொண்டவர் தங்காலை கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கோட்டேகொட பாதேகம பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான கடற்படை வீரர் ஒருவர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த கடற்படை வீரர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இருவருக்கும் இடையிலான காதல் விவகாரம் தொடர்பான பிரச்சினையே இச் சம்பவத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும், கொலைக்காக பயன்படுத்திய ரீ-56 ரக துப்பாக்கி மற்றும் 43 ரவைகளுடன் கூடிய மெகசின் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.