சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த திலக் மாரப்பன அமைச்சுப் பொறுப்புகளை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு குறித் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுடமை குறிப்பிடத்தக்கது.