ஆப்ரிக்காவில் மூளைக்காய்ச்சலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
காம்பியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலான 16 நாடுகளில் மெனின்ஜிட்டிஸ்-ஏ எனும் மூளைக்காய்ச்சல் நோய்க்கு எதிராக 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டு அந்தப் பகுதி முழுவதிலும் மொத்தமாக நான்கு பேருக்கு மட்டுமே மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஒரு காலத்தில் ஆப்ரிக்காவின் மேற்கு தொடங்கி கிழக்கு வரையிலான அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.
இதையடுத்து அந்நோய்க்கு எதிராக தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் 2010ஆம் ஆண்டு தொடங்கின.