Advertisement

Main Ad

விளையாட்டுத்துறை சட்டத்தில் திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

விளையாட்டுத்துறை சட்டத்தில் திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

விளையாட்டுத்துறை சட்டத்தில் 2013 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க, தேசிய விளையாட்டு சங்கங்களின் ஒழுங்கு விதிகள் கொண்ட 13 மற்றும் 17 ஆம் பிரிவுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று விடுக்கப்பட்டது.
2013 – முதலாம் இலக்க தேசிய விளையாட்டு சங்கங்களின் ஒழுக்க விதிகள் அடங்கிய 13 (1)
உத்தரவுகள் பிரகாரம் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளை ஒரு தடவையேனும் வகித்தவர்கள் மீண்டும் அந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவது உகந்ததல்ல என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் ”மேற்குறிப்பிடப்பட்ட எந்தவொரு நபரும்” என்ற பதம் ”மேற்குறிப்பிடப்பட்ட எந்தவொரு பொறுப்புக்கும்” என மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நியமனம் தொடர்பான விடயங்கள் அடங்கிய அதன் 13 (2) ஆம் இலக்கத்தின் இறுதியில், தொடர்ந்தும் எவ்வாறாக இருந்தாலும், நான்கு வருட பணிக்காலம் 2013 ஜனவரி 15 ஆம் திகதி முதலே அதாவது இந்த ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்பட்ட நாள் முதலே கணக்கிடப்படும் எனும் புதிய விதிமுறை உள்ளடக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவுசெய்யப்படும் முறைமை, 17 ஆம் பிரிவில் தெரிவிக்கப்பட்டதற்கமைய இரகசிய வாக்கெடுப்பானது இன்று விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ”கை உயர்த்துதல்” என மறுசீரமைக்கப்பட்டுள்ளது