அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் காலா காலமாக வாக்கு வங்கியாகவே செயற்பட்டு வருகிறார்கள் ஆனால் அதன் மூலம் பிரயோசனம் கிடைக்கின்றதா என்று பார்த்தால் பூச்சியத்தால் பெருக்கிய பெரும் பூச்சியமாகவே விடைதெரிகிறது.
ஒவ்வொரு அரசியல்வாதியும் அட்டாளைச்சேனைக்கு வந்து தங்களுக்கென்று ஒரு தரகரை நியமித்து அவருக்கு ஒரு தொகை பணத்தைக் கொடுத்து அப்பணத்தால் அவரும் அவரின் மனைவி குடும்பம் சந்தோஷமடையும் மக்களை பலிக்கடாக்களாக மற்றி வாக்களிக்கும் இயந்திரமாகச் செயற்படவைத்துக்கொண்டே இருந்து வருகின்றனர்.
ஆனால் அந்த முறை மாறவேண்டும். சொந்தக்காலில் நிற்க வேண்டும், சுயமாக அனைத்தையும் செய்யவேண்டும், சுயநல வாதிகள் கள்வர்கள், ஏமாற்றுவாதிகளை நம்பி ஊரை பாழாக்க முடியாது. என்ற சிந்தனையில் ஒவ்வொரு பொதுமகனும் செயற்பட வேண்டும். இப்படியாக அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றிய அந்த அரசியல் வாதிகளின் சில குறிப்புக்கள்.
மத்திய அரசின் இராஜாங்க அமைச்சராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்தினை அட்டாளைச்சேனை மக்கள் அழைத்துவந்து காண்பித்து ஏதேனும் உதவிகள் செய்யுங்கள் திறந்த வெளியாக கிடக்கும் இதற்கு சுற்றுமதிலாவது அமைத்துத் தாருங்கள் என்ற கோரிக்கையினை ஒரு காதில் கேட்டு மறு காதினால் தூக்கி வீசிவிட்டுச் சென்று விட்டார்.
அது போன்றுதான் மற்றவர்களும், இவ்வூர் மக்கள் ஒரே குரலில் ஒன்றிணைந்து மூன்று பேரையும் வெல்லவைத்து அவர்களின் ஆசனங்களில் அமர்ந்ததும் அங்கிருந்து செல்லும் ஒரு தொலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்க முடியாமல் இருக்கின்றனர்.
இந்த அவல நிலை தேவையா? கேவலமான அரசியல் கலாச்சாரம் தூக்கியெறியப்படவேண்டும் என்பதனை உணர்ந்து செயல்படும் தருணமே இன்று உருவாகியிருக்கிறது.
எனவே தன்னூரில் ஒரு பலம் இருந்தால் தன்னூரை உயர்த்தி விடலாம் என்ற கோட்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சினைப் பொறுப்பேற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், தான் பதவியேற்ற மறு நாளே அட்டாளைச்சேனையான தனதூருக்கு பல அமைச்சர்களிடமும் கெஞ்சிக்கேட்டுக் கிடைக்காத அந்த முக்கியமான தேவையாக இருந்த சுற்று மதில் அமைத்தல், ambulance, generator, fax, photo copy machine, furniture, ஆகியவற்றை கொடுக்க முடியுமென்றால் அவர்களின் வேலையென்ன என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.
பலவருடங்கள் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்களால் முடியாமல் இருந்த இந்த விடையங்களை அமைச்சு பொறுப்பேற்று ஒரு நாள் முடியுமுன்பே செய்வதென்பது பெரும் திறமையான விடையம் என்றே கூறவேண்டும்.
நேற்று ஏன் மாகாண சுகாதார அமைச்சைப் பொறுப்பேற்றீர்கள் என்று கேள்வி கேட்ட அட்டாளைச்சேனை மக்கள் இன்று நஸீரை வாழ்த்துப்போராட்டம் நடத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
எனவேதான் வெளியூர் அழகியைக் கண்டு மயங்கி நாசமாகப் ப்போவதனை விட உள்ளூரில் இருக்கும் முடமான பெண் சிறந்தவள் என்பதனை உணர்ந்து செயல்படுதல் முக்கியம் என்பதனை சிந்தித்து செயல்படுதல் கட்டாயத் தேவை என்று இன்று மக்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே சுகாதார அமைச்சர் நஸீரின் தொடரும் சிறந்த பணிகளை முன்னெடுக்க அட்டாளைச்சேனை மக்கள் நூறு வீதம் அவருக்கு கைகொடுப்பார்கள் என்பதனைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஊரில் சுயநலமாக வெளியூர் ஆரசியல்வாதிகளின் பந்த்துக்காக சுற்றிவரும் விரல் விட்டு எண்ணும் கேவலம் கொண்ட சிலரை மக்கள் தூசி வீசி விட்டனர் இனியும் அவர்கள் மக்கள் முன்தோன்ற முடியாதளவு நஸீரின் சேவைகள் முன்னெடுக்கப்படும். முன்னெடுப்பார் என்ற நல்லெண்ணாத்துடன் பயணிக்க அனைவரும் ஒன்றினைவோம்.
ஏமாற்றும் அரசியலைத் தூக்கி வீசுவோம்.