மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (04) நண்பகல் முதல் 30 நாட்களுக்கு, இந்த அவசரகால நிலை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீனினால் இன்று (04) இது குறித்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு இராணுவத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மாலைதீவு ஜனாதிபதியை கொல்வதற்கான சதி முயற்சி ஒன்றும் இடம்பெற்றிருந்தமை, அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளமையினாலும் குறித்த அறிவிப்புக்கு காரணம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.