Advertisement

Main Ad

பிரேஸிலின் கழிவு அணை உடைந்ததால் அழிவடைந்த கிராமம்

பிரேஸிலில் சுரங்கமொன்றின் கழிவுகள் தேக்கிவைக்கப்பட்டிருந்த பாரிய அணையொன்று உடைந்ததால் கிராமமொன்று முற்றாக அழிவடைந்துள்ளது.

இதனால் 13 பேர் உயிரிழந்தனர் எனவும் மேலும் 15 பேரைக் காணவில்லை எனவும் பிரேஸில் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளனர். 

பிரேஸிலின் தென்மேற்குப் பிராந்தியத்திலுள்ள பென்டோ ரொட்ரிகஸ் எனும் கிராமத்துக்கு அருகிலுள்ள சுரங்கத்தின் கழிவு அணையொன்று கடந்த வியாழக்கிழமை திடீர் உடைப்புக்குள்ளானது. 

இந்த அணை உடைய ஆரம்பித்ததையடுத்து, பென்டோ ரொட்ரிகஸ் கிராம மக்கள் அக்கிராமத்திலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர். அவர்களுக்கு சுமார் 25 நிமிடநேர அவகாசமே இருந்தது.

பின்னர் சுமார் 20 மீற்றர் உயரத்தில் வெள்ளம் பாய்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிவப்பு நிறமான அடர்த்தியான கழிவுநீர் இக்கிராமத்தின் வீடுகள், கட்டடங்கள் வாகனங்கள், கால்நடைகளை சில நிமிடங்களில் அழித்தது.
சுமார் 620 பேர் மேற்படி கிராமத்தில் வசித்தனர்.

இவர்களில் 13 பேர் உயிரிழந்தனர் எனவும் 15 பேரைக் காணவில்லை எனவும் ஆளுநர் மினாஸ் கிரேசிஸ் தெரிவித்துள்ளார்.


உயிர்தப்பிய மக்கள் அருகிலுள்ள கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.