Advertisement

Main Ad

வியாழனன்று நடைபெறவிருந்த இரண்டாவது இருபது-20 போட்டி நாளை புதன்கிழமைக்கு மாற்றம்

இலங்­கைக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இடையில் ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருந்த இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்டி ஒரு நாள் முன்­ன­தாக நடை­பெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. இப் போட்டி நாளை 11ஆம் திகதி இதே மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

மாது­லு­வாவே சோபித தேரோவின் இறுதிக் கிரி­யைகள் நடை­பெ­ற­வுள்ள 12ஆம் திகதி தேசிய துக்க தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் இந்த மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தேர­ருக்கு கௌரவ அஞ்­சலி செலுத்தும் வகையில், போட்­டி­யின்­போது பப்­பரே இசை தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

12ஆம் திகதி போட்­டிக்கு கொள்­வ­னவு செய்­யப்­பட்ட டிக்கட்டுகள் 11ஆம் திகதிக்கு செல்லுபடியாகும் என அறி விக்கப்பட்டுள்ளது.