இலங்கைக்கு எதிராக கெத்தாராம ஆர்.பிரேம தாச விளையாட்டரங் கில் ஞாயிறன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்கத் தவறியதால் அணித் தலைவர் என்ற வகையில் போட்டி பொது மத்தியஸ்தர் டேவிட் பூனினால் ஹோல்டருக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போட்டிக் கட்டணத்தில் 40 வீத அபராதமும் ஹோல்டருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜனவரி மாதம் நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போதும் குறிப்பிட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை நிறைவு செய்வதில் ஹோல்டர் தவறியிருந்தார்.
ஹோல்டருக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் மார்லன் சமுவெல்ஸ் பதில் தலைவராக செயற்படவுள்ளதாக அணி முகாமையாளர் தெரிவித்தார்.